June 25th, 2009 by Azhagiya Pandiyan
வளமான கற்றலுக்கு உரமூட்டும் கற்பித்தல்
தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு
25 ஜூன் 2009
அனைவருக்கும் வணக்கம்.
ஒரு தச்சனுக்கு மகனாக, மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து முறையாகக் கல்வி கற்க முடியாமல் தவித்த ஒரு வரலாற்று நாயகர். தான் பிறந்த மண்ணில் வேரூன்றியிருந்த அடிமைத்தனம் என்ற அறியாமையை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று தன் பதினைந்தாவது வயதிலேயே கனவுகண்டவர். பின்னர் அமெரிக்காவின் பதினாறாவது அதிபராகப் பொறுப்பேற்று தான் கண்ட கனவை நிறைவேற்றியவர். அமெரிக்காவின் களங்கமாக இருந்த அடிமைத் தனம் என்ற கொடிய மரத்தைத் [...]
«« Read More
May 27th, 2009 by Azhagiya Pandiyan
இன்று (27 மே 2009) சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
தமிழைக் கணினியில் புகுத்தி இணையத்திலும் அதற்கு ஒரு சிம்மாசம் ஏற்படுத்திக் கொடுத்து சில ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் பல்வேறு உள்ளீட்டு முறைகளும் விதம் விதமான விசைப்பலகைகளும் தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழைக் கையாள்வதைச் சிரமமாக்கி விட்டன என்பது எனது தாழ்மையான கருத்து.
இன்று யுனிகோட் என்ற அனைத்துலகத் தரத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் தமிழுக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் [...]
«« Read More
May 17th, 2009 by Azhagiya Pandiyan
அனைவருக்கும் வணக்கம்.
இந்த நுால் வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை வழங்குமாறு நண்பர் திரு காதர் அழைத்த போது சற்று தயங்கினேன். ஆனால் இது சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்திற்கு என் பங்கை ஆற்றுவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று உணர்ந்த போது மகிழ்ந்தேன்.
இருந்தாலும் ஒரு கல்லூரியின் துறைத் தலைவாகப் பணியாற்றி வரும் ஒரு கல்விமானை, 26 நுால்களை எழுதி வெளியிட்டிருக்கும் ஒரு பண்பட்ட எழுத்தாளரை, இரண்டே நுால்களைத் தந்திருக்கும் நான் எப்படி வாழ்த்துவது என்ற தயக்கம் எனக்குள் [...]
«« Read More
May 10th, 2009 by Azhagiya Pandiyan
நாம் நோய்வாய்ப்பட்டால் உடனே மருத்துவரைப் பார்த்து antibiotic எனப்படும் கிருமிக் கொல்லி மருந்தை உட்கொண்டு குணமடைகிறோம். ஆனால் சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு வரை antibiotic மருந்துகள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? முதலாம் உலகப் போரில் காயமடைந்த கிட்டத்தட்ட ஏழு மில்லியன் வீரர்கள் சரியான நோய்க் கொல்லி மருந்து இல்லாததால் மடிந்து போனார்கள் என்பது வரலாற்று உண்மை. இன்று நாம் சந்திக்கவிருக்கும் மருத்துவ மேதை கொஞ்சம் முன்னதாகவே பிறந்திருந்தால் அந்த ஏழு மில்லியன் வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப் [...]
«« Read More
May 10th, 2009 by Azhagiya Pandiyan
1945ம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி. உலக வரலாற்றில் ஒரு கறுப்பு தினம். அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று ஐப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னமானது ஹிரோஷிமா. மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாகக் கிழிந்தது நாகாசாகி. ஆயிரமாயிரம் அப்பாவி உயிர்கள் அநியாயமாகப் பலியான அந்தச் செய்தி கேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மியழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்துச் சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு [...]
«« Read More
May 10th, 2009 by Azhagiya Pandiyan
இரண்டாம் உலகப் போரினால் உருத் தெரியாமல் சிதைந்து போன ஒரு தேசம் ஜப்பான். உலக நாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்த போது இனி பல தலைமுறைகளுக்கு அந்தத் தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில். ஒரு சில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று, போர் முனையில் [...]
«« Read More
May 8th, 2009 by Azhagiya Pandiyan
கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிக பலம் வாய்ந்த நபர் யார் என்று கேட்டால் பெரும்பாலோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களைக் குறிப்பிடுவர். ராணுவ பலமும் பொருளியல் வளப்பமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படியொரு தகுதியைத் தந்திருக்கின்றன. உலகம் இதுவரை கண்டிருக்கும் 44 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்கள் முத்திரையைப் பதித்திருந்தாலும் அவர்களில் ஒரு சிலர்தான் உலகுக்குத் தேவைப்பட்ட முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தனர்; மனுக்குலத்துக்கு மகிமையைத் தேடித் தந்தனர். அவர்களுள் தலையாயவர் ஆப்ரஹாம் லிங்கன்.
1809ம் ஆண்டு [...]
«« Read More
May 8th, 2009 by Azhagiya Pandiyan
வானம் வசப்படுமே என்ற இந்தத் தொடரில் எந்த வரலாற்று மாந்தரை முதலில் அறிமுகம் செய்வது என்று நான் யோசித்த போது இந்த உலகிற்கு இன்று அதிகம் தேவைப்படுவது எது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து விட்டோம். மூன்றாவது எப்போது வருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில் நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, ராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும், நேசமும், பாசமும், கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டுமொத்த [...]
«« Read More